மதுரை சம்மட்டிபுரத்தில் வீடு புகுந்து 12 சவரன் நகை திருட்டு

மதுரை சம்மட்டிபுரத்தில் வீடு புகுந்து 12 சவரன் நகை திருட்டு
X
மதுரை சம்மட்டிபுரத்தில் வீடு புகுந்து 12 சவரன் நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை சம்மட்டிபுரம் புது வசந்தம் பகுதி, முதல் தெருவை சேர்ந்தவர் செல்வி 58. இவர் வெளியே சென்றிருந்த நேரத்தில், அவரது வீட்டில் பட்டப்பகலில் புகுந்த மர்ம நபர்கள், 12 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 2000ஐ திருடிச் சென்று விட்டனர்‌.

இந்த சம்பவம் தொடர்பாக செல்வி, எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் அந்த பகுதியை சேர்ந்த 2 பேர் மீது சந்தேகம் இருப்பதாக, அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்மட்டிபுரத்தில் வீடு புகுந்து பணம் நகை திருடிய சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!