ஊரடங்கிலும் வாகன நெரிசலில் தவிக்கும் மதுரை

ஊரடங்கிலும் வாகன நெரிசலில் தவிக்கும் மதுரை
X
அபராதம், பறிமுதல் செய்தும் பலன் இல்லை.

ஊரடங்கு நேரத்திலும்கூட வாகன நெரிசலில் சிக்கித் தவிக்கும் மதுரையின் நெல்பேட்டை முனிச்சாலை கீழ வெளி வீதி பகுதிகள்.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே கடைகளுக்கு அனுமதி என்பதால் குறிப்பிட்ட நேரத்திற்குள்அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் செல்ல மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.

இதனால் பொதுமக்களை விட வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது

அந்த வகையில், மதுரை நகரின் முக்கிய சாலைகள் தடுப்பு வைத்து அடைக்கப்பட்டதால் கீழ வெளி வீதி நெல்பேட்டை பகுதிகளில் வாகன நெரிசல் அதிகமாகக் காணப்படுகிறது இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை தவிர்க்க மாநகர போக்குவரத்து காவல்துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் சிலர் தேவையின்றி ஊர்வலம் வருகின்றனர். அவர்களது வாகனங்களை காவல்துறையினர் அபராதம் விதித்தும், பறிமுதல் செய்து வருகின்றனர். பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வரவேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் அபராதம் விதித்தும் வாகனங்களை பறிமுதல் செய்தும் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை வீட்டில் இருந்தால் விரைவாக கொரோனாவை விரட்டி விடலாம் என்பதை மக்கள் உணர வேண்டும் என்றார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!