மதுரையில் தண்ணீர் தந்த அதிசய மரம்

மதுரையில் தண்ணீர் தந்த அதிசய மரம்
X
மதுரை பழங்காநத்தம் பகுதியில் சாலையோரம் உள்ள வாகை மரத்தில் இருந்து திடீரென தண்ணீர் வரத்தொடங்கியது.

மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள வேல்முருகன் நகரில் சாலையோரம் ஒரு வாகை மரம் உள்ளது. இந்த மரத்தில் இருந்து திடீரென தண்ணீர் வரத் தொடங்கியது. இதைப்பார்த்த பொதுமக்கள் வீட்டில் இருந்த காலிகுடங்கள், வாளிகளை கொண்டு வந்த மரத்தில் இருந்து கொட்டும் தண்ணீரை பிடித்து சென்றனர்.

மரத்தில் இருந்து தண்ணீர் வரும் காட்சியை ஏராளமான வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பார்வையிட்டு சென்றனர். சிலர் இந்தக் காட்சியை வீடியோவாக பதிவிட்டு இணையத்தில் வைரல் ஆனது.

வாகை மரத்தை பார்க்க மக்கள் குவியத் தொடங்கினர். மரத்தில் இருந்து சுமார் 45 நிமிடங்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்தது.சிறிது நேரத்தில் மரத்தில் இருந்து வந்த தண்ணீர் நின்றுவிட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த இயற்கை ஆர்வலர்கள் மழையின் காரணமாக மரத்தில் வெற்றிடத்தில் நீர் தேங்கி இருக்கலாம். அந்த நீர் கூட இவ்வாறு வெளியேறலாம் என்றனர்.

வாகை மரத்தில் தண்ணீர் வந்தது குறித்து விளக்கமளித்துள்ள மாநகராட்சி அதிகாரிகள், "மரத்தின் கீழே செல்லும் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக அதிக அழுத்தத்தின் காரணமாக மரத்தில் இருந்து தண்ணீர் வந்துள்ளது" என்றனர்.

Tags

Next Story