/* */

வாங்க மருமகனே வாங்க -வேட்பாளரை வரவேற்ற மக்கள்

வாங்க மருமகனே வாங்க என 27 வகையான சீர்வரிசைகளுடன் மதிமுக வேட்பாளரை பொதுமக்கள் வரவேற்றனர்.

தேர்தலில் மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதியில் மதிமுக., வேட்பாளராக புதூர் பூமிநாதன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். மதிச்சியம் பகுதியில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அப்பகுதி மக்கள் வேட்பாளரை தங்கள் வீட்டு மருமகனை வரவேற்பது போல் ஆடு, மாடு, கோழி, அரிசி, பருப்பு என மளிகை பொருட்களை வைத்து பூரண கும்ப மரியாதையுடன் மலர் தூவி வரவேற்றனர். அதனைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த வேட்பாளர் பூமிநாதன் பொதுமக்களை வணங்கி வாக்கு கேட்டார்.இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது, கிராமப்புறங்களில் தங்கள் வீட்டிற்கு வரும் மருமகனை சீர்வரிசை கொடுத்து வரவேற்பது வழக்கம். அதே போல் எங்கள் தொகுதியை மகளாகவும், ஓட்டு கேட்டு வரும் வேட்பாளரை மருமகனாகவும் நினைத்து தான் 27 வகையான சீர்வரிசை பொருட்களுடன் வரவேற்பளித்தோம்.

வெற்றி பெற்று எங்கள் மதுரை தெற்கு தொகுதி என்ற செல்ல மகளை செல்வ செழிப்புடன் வாழவைப்பார் என்ற நம்பிக்கையில் உள்ளோம் என்றனர்.இந்நிகழ்வை தி.மு.க.,மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் பொன்முத்துராமலிங்கம் துவக்கி வைத்தார். பொறுப்புகுழு உறுப்பினர்கள் பொன்சேது, முகேஷ் சர்மா, ராமலிங்கம், தெற்குத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் மதிச்சியம் வேல்முருகன், 35 வது வட்ட கழக செயலாளர் ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Updated On: 25 March 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  2. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  3. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  4. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம்
  5. ஈரோடு
    ஈரோடு வந்த ரயிலில் கிடந்த 9.2 கிலோ கஞ்சா பறிமுதல்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு 71 பேர் தேர்வு
  7. நாமக்கல்
    வீடு ஒதுக்கீடு பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா வங்கிக் கடன்:...
  8. போளூர்
    நான்கு வழிச்சாலை திட்டங்கள் கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு
  9. திருவண்ணாமலை
    வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் ஆய்வுக் கூட்டம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்