பசு மாட்டின் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மர்ம நபர்கள் - போலீசார் விசாரணை

பசு மாட்டின் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மர்ம நபர்கள் - போலீசார் விசாரணை
X
மதுரை ஆனையூர், ஊமச்சிகுளம் பகுதிகளில் சாலையில் திரியும் மாடுகள் மீது எண்ணெய் மற்றும் ஆசிட் ஊற்றும் சம்பவம் அதிகரித்து வருகிறது

சாலையில் சுற்றித் திரிந்த பசு மாட்டின் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய கொடுமை. வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மதுரை தல்லாகுளம் பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த பசு மாட்டின் மீது மர்ம நபர்கள் கொதிக்கும் எண்ணெயை ஊற்றியதால் உடல் முழுவதும் காயங்களுடன் சுற்றித்திரிகிறது.

கடந்த 10 நாட்களில் மதுரை ஆனையூர், ஊமச்சிகுளம் பகுதிகளில் சாலையில் திரிந்த பசு மற்றும் காளைகள் மீது எண்ணெய் மற்றும் ஆசிட் ஊற்றும் சம்பவம் அதிகரித்து வருகிறது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பசு மாட்டின் உரிமையாளர் தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!