இயந்திரகோளாறு- காத்திருந்த அமைச்சர் செல்லுார்ராஜூ

இயந்திரகோளாறு- காத்திருந்த அமைச்சர் செல்லுார்ராஜூ
X

அமைச்சர் செல்லூர் ராஜு, தான் பதிவு செய்த வாக்கிற்கு விவிபேட் மிஷினில் சிலிப் வராததை முறையிட்டு வாக்குமையத்திலேயே அமர்ந்ததால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் செல்லூர் கே ராஜூ, மதுரை தெற்கு தொகுதிக்குட்பட்ட மீனாட்சி அரசு பெண்கள் கலைக் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். அப்போது விவிபேட் மிஷினில் அவர் பதிவு செய்த வாக்கிற்கான சிலிப் வராததால் வாக்குச்சாவடி அலுவலரிடம் இதுகுறித்து முறையிட்டு, வாக்குச்சாவடியிலேயே செல்லூர் கே.ராஜூ அமர்ந்தார்.மண்டல அதிகாரி சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை பரிசோதித்து தங்களது வாக்கு விழுந்திருப்பதாக கூறிய பிறகே, செல்லூர் ராஜூ அவரது மனைவி, இரு மகள் மற்றும் மருமகன் ஆகியோர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இதனால் வாக்குச்சாவடியில் சிறிது நேரம்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story