காரில் வந்தவர் ஹெல்மெட் அணியாததாக அபராதம்

காரில் வந்தவர் ஹெல்மெட் அணியாததாக அபராதம்
X

மதுரையில் காரில் வந்தவர் ஹெல்மெட் அணியவில்லை என காவல்துறையினர் அபராதம் விதித்ததால் காரின் உரிமையாளர் குழப்பமடைந்துள்ளார்.

மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் சொந்தமாக வாடகை கார் வைத்து நடத்தும் நிறுவன உரிமையாளராக உள்ள ராமநாதன் என்பவருக்கு சொந்தமான கார் ஒன்றுக்கு மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அந்த வாகனக் கடன் கட்டி முடித்ததற்கு ஹெச்பி ரத்து செய்வதற்காக விண்ணப்பித்துள்ளார். அப்பொழுது ராமநாதனின் வாகனத்திற்கு 100 ரூபாய் அபராதம் உள்ளதாகவும், அதனை கட்டினால் தான் தகுதி சான்றிதழ் தர முடியும் என வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அபராத தொகையான ரூ.100 ஐ ராமநாதன் கட்டி விட்டார். பின்னர் ரசீதை சரி பார்த்த பொழுது கடந்த 19/06/20 அன்று ஹெல்மெட் அணியவில்லை என மதுரை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிய வந்தது. ஆனால் ஹெல்மெட் அணியவில்லை என வழக்குப்பதிவு செய்யப்பட்டது நான்கு சக்கர வாகனத்திற்கு என்பதும் குறிப்பாக அபராதம் விதிக்கப்பட்ட நாளன்று அந்த வாகனமானது மைசூரில் இருந்ததாக வாகன உரிமையாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவத்தன்று மதுரையிலேயே வாகனம் இல்லாத பொழுது காருக்கு ஹெல்மெட் அணியவில்லை என வழக்கு பதிவு செய்துள்ளது விசித்திரமாக உள்ளது என வாகன உரிமையாளர் வேதனையுடன் தெரிவித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்