மதுரை ரயில்வே கோட்டத்தின் கடந்த ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்...

ரயில். (மாதிரி படம்).
இந்தியாவில் உள்ள நான்கு வகையான போக்குவரத்தில், உள்நாட்டு அளவில் அதிக வருவாய் ஈட்டித் தருவது ரயில்வே துறை மட்டுமே. வருமானத்தை மட்டுமின்றி மக்களுக்கு சேவை வழங்கும் நோக்கிலேயே ரயில்வே துறை செயல்பட்டு வருகிறது. தமிழகதில், ரயில்வே துறையை பொறுத்தவரை, மதுரை ரயில்வே கோட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.
தெற்கு ரயில்வே எல்லைக்கப்பட்ட பகுதிகளில் மதுரை ரயில்வே கோட்டத்தின் வருமானம் கடந்த சில ஆண்டுகளை விட தற்போது அதிகரித்துள்ளது என்றே கூறலம். அதாவது, மதுரை ரயில்வே கோட்டத்தின் மொத்த வருமானம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 80.67 சதவீதம் அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் பயணிகள் வருமானம் 280.80 கோடி ரூபாயாக இருந்தது. நடப்பு ஆண்டு 78 சதவீதம் அதிகரித்து 502.05 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு 191.44 கோடி ரூபாயாக இருந்த சரக்கு போக்குவரத்து வருமானம் 27 சதவீதம் அதிகரித்து உள்ளது. நடப்பு ஆண்டில் 242.60 கோடி ருபாயாக உயர்ந்து உள்ளது. மதுரை கோட்டத்தில் ரயில்களில் கடந்த ஆண்டில் 9.2 மில்லியன் பயணிகள் பயணித்து உள்ளனர். நடப்பு ஆண்டு பயணிகள் எண்ணிக்கை 24.1 மில்லியனாக உயர்ந்து உள்ளது.
கடந்த ஆண்டு பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்த பயணிகளிடம் இருந்து 654.41 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. நடப்பு ஆண்டு பயணச்சீட்டு இல்லாத, பயணிகள் ரயில்களில் வர்த்தக பயன்பாட்டு சரக்குகள் கொண்டு சென்ற, ரயிலில் புகை பிடித்த, ரயில் நிலையத்தை அசுத்தப்படுத்திய பயணிகளிடம் இருந்து அபராதமாக 834.12 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளது. பயணிகள் ரயில்களில் 21,358 டன் சரக்குகளும், சரக்கு ரயில்களில் 2.20 மெட்ரிக் டன் சரக்குகளும் கையாளப்பட்டுள்ளன என ரயில்வே துறை வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu