மதுரை: முழு ஊரடங்கு உத்தரவு வெறிச்சோடிய சாலைகள்

மதுரை: முழு ஊரடங்கு உத்தரவு வெறிச்சோடிய சாலைகள்
X

முக்கிய சாலைகளில் தடுப்பு அமைத்து ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் வரும் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல்..!

கொரோனா இரண்டாம் நிலை பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து தமிழகத்தில் நாள்தோறும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36 ஆயிரத்தை கடந்துள்ளது.

நோயை தொற்றை தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது இந்த நிலையில் மே 24-ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் மதுரையின் முக்கியமான இடங்களில் கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகள் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் பால் விற்பனை மருந்தகங்கள் பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் செயல்பட்டன.

மதுரை மாநகர பகுதிகளில் இடங்களில் காவல்துறையினர் தடுப்பு அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் காவல்துறையினர் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் மதுரை காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் ஊரடங்கு உத்தரவை மீறி தேவையின்றி வெளியில் வரும் வாகனங்களை காவல்துறையினர் அபராதம் விதித்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!