ரெம்டெசிவிருக்காக மருத்துவமனையில் தவமிருக்கும் நோயாளிகளின் உறவினர்கள்!

ரெம்டெசிவிருக்காக மருத்துவமனையில் தவமிருக்கும் நோயாளிகளின் உறவினர்கள்!
X

ரெம்டெசிவிர் மருந்துக்காக மதுரை மருத்துவமனையில் காத்துக்கிடக்கும் நோயாளிகளின் உறவினர்கள்

மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை கடந்த வாரம் முதல் தொடங்கி வைக்கப்பட்டது. நாளொன்றுக்கு ஐநூறு மருந்துகள் மட்டுமே பொது விற்பனைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு இருப்பு இல்லை எனக்கூறி விற்பனை நிறுத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் மீண்டும் துவங்கி வழங்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் உறவினர்களை காப்பாற்ற அதிகாலையிலிருந்தே வரிசையில் நின்று வாங்கி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!