மதுரையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நாடகம்

மதுரையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நாடகம்
X

மதுரையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில், கோரிப்பாளையம் போக்குவரத்து சிக்னல் அருகில் கொரோனா விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. 

மதுரையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில், கொரோனா விழிப்புணர்வு நாடகம், மதுரை கோரிப்பாளையத்தில் நடைபெற்றது.

கொரோனா பெருந்தொற்று குறித்தும், இரண்டாவது அலை பெரும் தாக்கம் குறித்தும், பொதுமக்களுக்கு இந்நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மதுரையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில், மதுரையில் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.

கோரிப்பாளையம் போக்குவரத்து சிக்னல் அருகில் நடைபெற்ற விழிப்புணர்வு நாடகத்தில், கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. நாம் அனைவரும் அடிக்கடிகை கழுவ வேண்டும், தனிமனித இடைவெளி கட்டாயம் பின்பற்ற வேண்டும், அவசியம் முகக்கவசம் அணிவதோடு அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று, இதில் தெரிவிக்கப்பட்டது.

மாணவ-மாணவிகள் இந்த மூன்று நிமிட நாடகத்தில் தத்ரூபமாக நடித்துக் காட்டி, பாராட்டை பெற்றனர். நாள்தோறும் 2 முறை என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடித்துகாட்ட இருப்பதாக இந்திய மாணவசங்க மதுரை மாவட்ட தலைவர் வெயில் தேவா தெரித்தார்.

Tags

Next Story
smart agriculture iot ai