மதுரையில் குறுவை சாகுபடி பயிர்கடன் வழங்குவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்

மதுரையில் குறுவை சாகுபடி பயிர்கடன் வழங்குவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்
X

மதுரையில் குறுவை சாகுபடி பயிர்கடன் வழங்குவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது 

குறுவை சாகுபடி பருவத்தில் கூட்டுறவு சங்கம் வாயிலாக பயிர்கடன் வழங்குதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மதுரை, தேனி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் குறுவை சாகுபடி பருவத்தில் கூட்டுறவு சங்கம் வாயிலாக விதைகளுக்கு பயிர் கடன் வழங்குதல்,உர வினியோகம் தொடர்பான ஆலோசனை கூட்டம் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன், கம்பம் ராமகிருஷ்ணன், தமிழரசி, கோ.தளபதி மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு. அனிஸ் சேகர், துணை ஆட்சியர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!