தனியார் நிறுவனங்களில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர் - மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு.

தனியார் நிறுவனங்களில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர் - மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு.
X
ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் நிரம்பிவிட்டது

கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதில் பெரும்பாலானோருக்கு ஆக்ஸிஜன் தேவையுடன் வருகிற சூழ்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது.

அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் நிரம்பிவிட்டது. வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய ஆக்ஸிஜனும் வராத காரணத்தினால் ஆக்ஸிஜன் கிடைப்பதில் தட்டுப்பாடும் ஏற்பட்டது.

இதனால் நோயாளிகள் மருத்துவமனை முன்பு பல மணி நேரம் காத்திருக்கும் ஒரு அசாதரண சூழ்நிலை நிலவியது. சிகிச்சை பெறும் நோயாளிகள் டிஸ்சார்ஜ் ஆனால் மட்டுமே உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட நிலையில்,

மதுரை மாவட்ட நிர்வாகம் ஒத்தக்கடை மற்றும் கப்பலூரில் உள்ள தனியார் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களை கொள்முதல் செய்து ஆட்சியர் அலுவலகத்தில் சேமிப்பு கிடங்கில் வைத்து உள்ளனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவைப்படுவோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு ஆக்ஸிஜன் சிலிண்டர்களை பெறுவதற்கு வசதியாக வைத்துள்ளதாக மாவட்ட நிர்வாக தரப்பில் கூறியுள்ளனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil