மதுரை: அமைச்சர்கள், கலெக்டர் தலைமையில் கொரோனா தடுப்பு குறித்து ஆலோசனைக்கூட்டம்

மதுரை: அமைச்சர்கள், கலெக்டர் தலைமையில் கொரோனா தடுப்பு குறித்து ஆலோசனைக்கூட்டம்
X
18+ வயதினருக்கு தடுப்பூசி கையிருப்பு இல்லை; வந்த பின்னரே பணிகள் துவங்கும் : நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மதுரை மாவட்டத்தில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், மக்களுக்கு வீடுகளுக்கே நேரில் சென்று காய்கறி, பழம், மளிகை பொருட்கள் விநியோகம் செய்வது குறித்தும், கொரோனா தடுப்பிற்கு மாவட்ட அளவில் அமைக்கப்பட்டு உள்ள சிறப்பு பணிக்குழு (Task Force) செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அளித்த பேட்டி :

மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு கொடுத்ததை போல விலையில் மாறுபாடு இல்லாமல் கொடுப்பது குறித்து ஆலோசித்து உள்ளோம். மதுரையில் கிராம புறங்களில் பரவல் அதிகரிக்க கூடாது என்பதற்காக, தீவிர கவனம் செலுத்தி வருகிறோம்.

மதுரை மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி வழங்குவதை நடைமுறைப் படுத்துவது தொடர்பாக இணையதளம் துவங்கப்படும். குஜராத்தில் அதிகமாக தடுப்பூசி வழங்கப்படுகிறது. தமிழகத்திற்கு மத்திய அரசு குறைவான தடுப்பூசிகள் மட்டுமே வழங்குகின்றன. தடுப்பூசி விவகாரத்தில் மாநிலங்கள் செயல்முறை குறித்து மத்திய அரசு முரண்பட்டு செயல்படுகிறது. முதலில் மாநிலங்கள் வாங்க கூடாது என்று. இப்போது, மாநிலங்கள் வாங்கிக் கொள்ள வேண்டும் என்கிறது.

எனவே, 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு தேவையான தடுப்பூசியை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை. அது வந்த பின்னரே பணிகள் துவங்கும்.

வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி பேட்டி :

மதுரையில் உள்ள எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் எங்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதை புறக்கணிக்கிறார்கள். வெளிப்படை தன்மைக்காக, கூட்டு உழைப்பிற்காக நாங்கள் அழைப்பு விடுத்தும் அவர்கள் தவிர்க்கிறார்கள். இனி அவர்களும் பங்கேற்று, தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

மதுரையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பதே கிடையாது... ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழக நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன்..வெறிபிடித்த குலைக்கும் நாய்க்கு எல்லாம் நான் பதில் சொல்லமுடியாது - நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி....வெறிபிடித்த குலைக்கும் நாய்க்கு எல்லாம் நான் பதில் சொல்லமுடியாது - நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பாஜக எச்.ராசா வுக்கு பதிலடி:

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பேட்டியளித்த நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,

நான் இத்தனை தடவையாக சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன், இந்த முறை 34000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தலைவர் எனக்கு மிக பொறுப்புள்ள அமைச்சர் பதவி கொடுத்திருக்கிறார்.

அப்போலாம் விட்டுட்டு இப்ப வந்து எவனோ ஒருவன் சொல்கிற பேச்சுக்கெல்லாம் பதில்கூறமுடியாது. வெறிபிடித்த குலைக்கும் நாய்க்கு எல்லாம் நான் பதில் சொல்லமுடியாது என நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!