மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்த பெண்களிடம் செயின் பறிப்பு

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு   வந்த பெண்களிடம்  செயின் பறிப்பு
X

மதுரை தெற்கு வாசல் காவல் நிலையம்.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்த பெண்களிடம் மர்ம நபர்கள் செயினை பறித்துச் சென்றனர்.

மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்திற்கு சென்று திரும்பிய பெண்களிடம் அடுத்தடுத்து செயின் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை, மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய பெண்களிடம் அடுத்தடுத்து செயின் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரையில் இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாத்தூர் பூண்டிவிளக்கு பகுதியை சேர்ந்த இந்திரா (59) பங்கேற்றார். இவரிடமிருந்து 2 பவுன் தங்க சங்கிலியை மர்ம ஆசாமிகள் திருடி விட்டனர். இதேபோல மதுரை, ஜெய்ஹிந்த்புரம், ஜீவா நகர், கம்பர் தெருவை சேர்ந்த அமுதா (62)என்பவரிடமிருந்தும் 3 பவுன் தங்க செயினை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுவிட்டனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக இந்திராவும்,அமுதாவும் தெற்குவாசல் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து செய்து இருவரிடமும் செயின் திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!