கொரோனா தொற்று: மதுரையில் அரசு பெண் மருத்துவர் பலி

கொரோனா தொற்று: மதுரையில் அரசு பெண் மருத்துவர் பலி
X
கொரோனா தொற்று பாதிப்பால், மதுரையில் கர்ப்பிணியாக இருந்த அரசு பெண் மருத்துவர் உயிரிழந்தது, சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது/

மதுரை அனுப்பானடி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வந்தவர், மருத்துவர் சண்முகப்பிரியா . இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, அதை தொடர்ந்து, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி, மருத்துவர் சண்முகப்பிரியா உயிரிழந்தார். மதுரையில் கொரோனா தொற்று இரண்டாம் அலையில், கர்ப்பிணி பெண் மருத்துவர் உயிரிழந்தது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவரின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மருத்துவர் சண்முகப்பிரியா கொரோனா பெருந் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story
ai solutions for small business