கொரோனா தடுப்பூசி மையத்தில் கேள்விகுறியான சமூக இடைவெளி

கொரோனா தடுப்பூசி மையத்தில் கேள்விகுறியான சமூக இடைவெளி
X

மதுரையில் கொரோனா தடுப்பூசி மையத்தில் சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை ஷெனாய்நகர் பகுதியில் உள்ள பள்ளியில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி மையமாக செயல்பட தொடங்கிய நிலையில் இன்று காலை முதல் அங்கு ஏராளமானோர் குவிந்தனர்.300க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் குவிந்ததால் சமூக இடைவெளி கேள்விக்குறியானது.தனியார் மருத்துவமனை ஊழியர்களுக்கு ஒரே நேரத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளித்ததால் ஒரே நேரத்தில் குவிந்தனர். மேலும் சுகாதாரத்துறையினர் பொதுமக்களை நீண்ட நேரம் காத்திருக்க வைத்து தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.கொரோனா தடுப்பூசியை செலுத்துவதில் முறைகேடுகள் நடைபெறாமல் உரியமுறையில் பொதுமக்களுக்கு செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், மாஸ்க் அணிய வேண்டும் என அரசு நாளுக்கு நாள் அறிவுறுத்தி வரும் நிலையில் அரசு சார்பில் நடத்தப்படகூடிய கொரோனா தடுப்பூசி மையத்திலேயே போதிய சமூக இடைவெளி கடைபிடிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!