லோடுவேனில் பேட்டரி திருடிய வாலிபர்கள் கைது

லோடுவேனில் பேட்டரி திருடிய வாலிபர்கள் கைது
X

ஜெய்ஹிந்த் புரத்தில் லோடுவேனில் பேட்டரி திருடிய வாலிபர்கள் கைது. கையும் களவுமாக பிடிபட்டனர்.

மதுரை, ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் மருதுபாண்டி 41 .இவர் வீட்டின் முன்பாக டாட்டா ஏஸ் வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார்.அப்போது நள்ளிரவில் அவரது வேனில் வைத்திருந்த பேட்டரியை இரண்டுபேர் திருடியது தெரியவந்தது. அவர்களை விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ஜீவாநகர் என்எஸ்கே தெருவைச் சேர்ந்த ராஜ்குமார் 27 மற்றும் தங்கபாண்டியன் 24 என்று தெரியவந்தது அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!