மதுரையில் நடமாடும் காய்கறி வாகனம் துவக்கப்பட்டது

மதுரையில் நடமாடும் காய்கறி வாகனம் துவக்கப்பட்டது
X

10 விதமான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பை ரூ.100 க்கு விற்பனை

தமிழகம் முழுவதும் இன்றிலிருந்து 7 நாட்கள் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு மதுரை முக்கிய நகர்ப் பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த நிலையில் மதுரை மக்களின் அத்தியாவசிய தேவைகளை போக்கும் விதமாக மதுரை மாநகராட்சியின் சார்பாக மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து முதற்கட்டமாக 15 நடமாடும் காய்கறி விற்பனை வாகனத்தை மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் பார்வையிட்டு துவக்கிவைத்தார்.

இந்த வாகனத்தில் விற்கப்படும் காய்கறி பையின் தொகுப்பில் கத்தரி, வெண்டை, அவரை வெங்காயம், தக்காளி, தேங்காய் உள்ளிட்ட பொருட்கள் அடங்கியுள்ளன. காய்கறி குறைந்த விலையில் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வாகனம் பொதுமக்களின் இருப்பிடங்களுக்கு நேரடியாக சென்று விற்பனை செய்யப்பட உள்ளது. முதல்கட்டமாக 15 வாகனங்கள் இன்று மதுரை மாநகர முக்கிய பகுதிகளுக்கும் செல்லும் வரும் நாட்களில் 125 வாகனம் இயக்கப்படும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!