மதுரை உயர்நீதிமன்ற கிளையில் எச்.ராஜா முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் எச்.ராஜா முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்
X
2018 ஆண்டு புதுக்கோட்டை கோவில் விழாவில் மேடை அமைக்கும் பிரச்சனையில் திருமயம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், எச்.ராஜா முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்.

நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் H.ராஜா மனு தாக்கல்செய்துள்ளார். பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2018ஆம் ஆண்டு திருமயம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கோவில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றபோது மேடை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் திருமயம் காவல் ஆய்வாளர் மனோகரன் என் மீது அளித்த புகாரின் அடிப்படையில் திருமயம் காவல்நிலையத்தில், என் மீதும், பல்வேறு நபர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் திருமயம் கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குற்றப் பத்திரிக்கையில் என்னை தலைமறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு கீழமை நீதிமன்றம் எனக்கு சம்மன் அனுப்பி இருக்கிறது. இந்த வழக்கில் காவல்துறையினர் என்னை கைது நடவடிக்கையில் ஈடுபடாமல் இருப்பதற்காக முன் ஜாமின் வழங்க வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளும் பின்பற்றுவதாக மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Tags

Next Story
குடல் ஆரோக்கியத்தை ஆரோக்கியமா வெச்சுக்கணுமா? அப்ப இத கண்டிப்பா பண்ணுங்க!| how to improve gut health in Tamil