சொந்த செலவில் மாஸ்க் வழங்கி வரும் காவலர்

சொந்த செலவில் மாஸ்க் வழங்கி வரும் காவலர்
X

மதுரையில் மாஸ்க் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு சொந்த செலவில் மாஸ்க் வழங்கும் போக்குவரத்து காவலரை அனைவரும் பாராட்டினார்கள்.

மதுரையில் மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் அருகே உள்ள சிக்னலில் பணியில் இருந்த போக்குவரத்து காவலர் பழனியாண்டி என்பவர் அவ்வழியாக மாஸ்க் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு தாம்பூல தட்டில் வைத்து இலவசமாக மாஸ்க் வழங்கி, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வீட்டை விட்டு வெளியே வரும்போது மாஸ்க் அணியாமல் வரக்கூடாது என்று அறிவுரை கூறி, மாஸ்க் அணிவதன் அவசியத்தை பற்றி எடுத்து கூறி வருகிறார்.

மாஸ்க் அணியாமல் வந்தால் அபராதம் விதிக்கும் போக்குவரத்து காவலர்களுக்கு மத்தியில் அன்பாக அறிவுரையும் கூறி முககவசத்தையும் இலவசமாக வழங்கும் போக்குவரத்து காவலர் பழனியாண்டியை வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!