இசை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்க கோரிக்கை

இசை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்க கோரிக்கை
X

இன்னிசை நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி தரக்கோரி மதுரையில் தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞர்கள் சங்கம் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் தற்போது உள்ள கட்டுப்பாடுகளுடனான ஊரடங்கு உத்தரவு காரணமாக கோயில் திருவிழாக்கள் திருமணம் போன்ற மங்கல நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் நடத்த முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. மேலும் கடந்த ஆண்டு இதே கொரோனா பாெது முடக்கத்தால் பாதிக்கப்பட்டு எங்களால் பிழைப்பு நடத்த முடியாமல் பேரிழப்பு ஏற்படுத்தி இருந்தது. அதேபோல் இந்த ஆண்டும் இதே நேரத்தில் எங்கள் தொழிலும் பாதிக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

எனவே நிபந்தனைகளின் அடிப்படையில் எங்களுக்கு இசை நிகழ்ச்சிக்கு அனுமதி தந்தது போல் இசைக்கலைஞர்களுக்கு கருணை அடிப்படையில் போதிய நிவாரண தொகை வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞர்கள் சங்கம் மதுரை மாவட்ட கிளை சார்பில் அதன் தலைவர் விஜய் தலைமையில் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . பின்னர் மதுரை மாவட்ட கலெக்டரை சந்தித்து மனுக்கள் கொடுத்தனர்.

Tags

Next Story