பாஜகவினரை விரட்டியடித்த விசிக தொண்டர்கள்

பாஜகவினரை விரட்டியடித்த விசிக தொண்டர்கள்
X

பாஜகவினரை விரட்டியடித்த விசிக தொண்டர்கள்

மதுரை தல்லாகுளத்தில் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் விரட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என்று போற்றப்படும் டாக்டர் பி ஆர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை தல்லாகுளம் செக்போஸ்ட் அருகே உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளும், தலைவர்களும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வருகை தருவதற்கு முன்னாள் பாஜகவினர் அங்கு வருகை தந்ததால், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இரண்டு கட்சியினருக்கும் மோதல் உருவாகும் சூழல் நிலவியது. ஒரு கட்டத்துக்குப் பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் பாஜகவினரை அங்கிருந்து விரட்டியடித்தனர்.இதனால் தல்லாகுளம் செக்போஸ்ட் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
நாமகிரிப்பேட்டையில் பெண் ஐ.டி ஊழியர் மீது தாக்குதல் - குற்றவாளி கைது