மதுரையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த வாலிபர்கள் கைது

மதுரையில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த வாலிபர்கள் கைது
X
மதுரையில் பயங்கரமான பட்டாக்கத்தி வாலுடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

மதுரையில் பட்டாக்கத்தி யுடன் சுற்றித் திரிந்த 2 வாலிபர்களை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை டி.பி.கே ரோடு முத்து பாலம் பகுதியில் ரயில்வே தண்டவாளம் அருகே பயங்கரமான பட்டாக்கத்தி வாளுடன் பதுங்கியிருந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சோமசுந்தரம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது டி.பி.கே ரோடு பாலம் ரயில்வே தண்டவாளம் அருகே சந்தேகப்படும் படியாக 2 வாலிபர்கள் பதுங்கி இருந்தனர்.

இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பயங்கரமான பட்டாக்கத்தி வாள் ,கத்தி மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் மதுரை பாரதியார் ரோட்டை சேர்ந்த ஜெயராஜ் மகன் விக்னேஸ்வரன் (23) ஜெய் ஹிந்து மதத்தை சேர்ந்த மச்சக்காளை மகன் வல்லரசு வயது (21) ஆகிய இருவரையும் போலீசார் குற்ற சம்பவங்களில் ஈடுபட போகின்றனரா? கொலை முயற்சியில் ஈடுபட உள்ளனரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!