குடிக்க மது கேட்டு முதியவர் மீது தாக்குதல்- வாலிபர் கைது

குடிக்க மது கேட்டு முதியவர் மீது தாக்குதல்-  வாலிபர் கைது
X
மதுரை ஐராவதநல்லூர் பகுதியில், குடிக்க மது கேட்டு முதியவரை தாக்கிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்

மதுரை ஐராவதநல்லூரை சேர்ந்தவர் அர்ஜுனன் (வயது 66 ); அதே பகுதியை சேர்ந்தவர் பாண்டி மகன் அஜய் கண்ணன் (வயது 24 ). இவர் அர்ஜூனனிடம் மது வாங்கி தரும்படி கேட்டுள்ளார். அதற்கு அர்ஜுனன் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஜய்கண்ணன் , முதியவர் அர்ஜுனனை பலமாக தாக்கியுள்ளார் .இதில் காயமடைந்த அர்ஜுனன், இச்சம்பவம் குறித்து தெப்பக்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார், அஜய் கண்ணனை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!