மதுரையில் வன உயிரின வார விழா: விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
வனவிலங்கு உயிரின வாரவிழா விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர்
வனஉயிரின வார விழாவையொட்டி மாணவ, மாணவிகளுடன் மதுரை ஆட்சியர் சைக்கிள் பேரணியில் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
உலக வன உயிரின வார விழா ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கடந்த 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை கடை பிடிக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்ட வனத்துறை சார்பிலும் பொதுமக்களுக்கு வன உயிரினங்கள், அவற்றின் வாழ்விடங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இந்நிலையில் வன உயிரின வார விழாவையொட்டி மதுரை மாவட்ட வனத்துறை சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள், இயற்கை ஆர்வலர்கள், விலங்குகள் நல ஆர்வலர்கள் சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தானும் சைக்கிள் பேரணியில் பங்கேற்று சைக்கிள் ஓட்டினார். இந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி ரேஸ்கோர்ஸ் சாலையில் தொடங்கி தமுக்கம் மைதானம்,காந்தி அருங்காட்சியகம், ராஜா முத்தையா மன்றம் வரை பேரணியாக சென்றனர். மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் சைக்கிள் பேரணியில் பங்கேற்று மாணவ, மாணவிகளோடு 6கிலோ மீட்டர் தொவைவுக்கு சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தியதை பொதுமக்கள் பாராட்டினர்.
பேரணியில் வனங்களையும், வன உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டும், வன உயிரினங்களை வேட்டையாடக்கூடாது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.இந்தபேரணியில் மாவட்ட வன அலுவலர் குருசாமி டபாலா, வனத்துறை பாதுகாவலர், மேகமலை காப்பக இயக்குனர் தீபக்தில்ஜி மற்றும் வனத்துறை அதிகாரிகள், காவலர்கள் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu