சாலை வசதிகள் இல்லாத நிலையில் ரூ.112 கோடி கலைஞர் நூலகம் எதற்கு? செல்லூர் ராஜு
பைல் படம்
சாலை வசதிகள் இல்லாத நிலையில் 112 கோடி ரூபாய் கலைஞர் நூலகமா செல்லூர் ராஜு கேள்வி எழுப்பினார்.
மதுரை மாநகர் மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்.எனக் கோரி மதுரை மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அதிமுக சார்பில் மதுரை டி.எம் .கோர்ட் பகுதியில் போராட்டம் நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:
இன்றைக்கு திமுக அரசையும் மாநகராட்சியை கண்டித்து நடைபெறும் இந்த கண்டனக்கூட்டத்துக்கு தானா சேர்ந்த கூட்டம் இது. மக்கள் பங்கேற்புடன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சாலை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் சிரமம் பட்டு வருவதை சரிசெய்யாமல்,112 கோடி ரூபாயில் கலைஞர் நூலகம் கட்ட அரசாணை வெளியிட்டு உள்ளனர்.
முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது . பொங்கல் பரிசாக கடந்த ஆண்டு 2500 ரூபாய் கொடுத்த போது, உதயநிதி ஸ்டாலின், கனிமொழி 5 ஆயிரம் ரூபாய் கொடுக்க சொன்னவர்கள்தான் தற்போது ஆட்சியில் இருக்கின்றனர். கொரோனா மூன்றாம் அலை வந்துவிட்டது .ஆனால் ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை.
பொங்கல் பரிசாக 10 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்.கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்ட நகை கடன் ரத்து என்று தேர்தல் அறிக்கையில் சொல்லிவிட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விடுத்து 13 லட்சம் பேருக்கு மட்டுமே வழங்கப்படும் என்று அறிவித்து, இப்போது மக்களுக்கு துரோகம் செய்துளளனர்.தமிழக நிதியமைச்சர் மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகளில் ஊழல் நடைபெற்றுள்ளது என்று பேசுகிறார். ஊழல் நடைபெற்றிருந்தால் தற்போது எங்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கலாமே.
மதுரை மக்கள் ரோஷக்காரர்கள் என்பதையும் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதையும் நிரூபிக்கும் வகையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை பெருவாரியாக வெற்றி பெறச் செய்ய வேண்டும். போக்க்குவரத்து தொழிலாளர்களை இன்றைய அரசு வஞ்சித்து வருகிறது. நீட்தேர்வு ,7 பேர் விடுதலை, எய்ம்ஸ் கட்டுமான பணிகள் ஆகியவற்றில் திமுக அரசு எந்த முன்னேற்றத்தையும் கொண்டு வரவில்லை.
மதுரை மக்கள் வாக்களித்து தானே நீங்கள் மதுரையிலுள்ள தொகுதிகளில் வெற்றி பெற்றீர்கள் . ஆனால் மதுரையை திமுக அரசு அடிப்படை வசதிகள் எதுவும் செய்ய முன்வராமல் வஞ்சித்து வருகிறது. வருகிற உள்ளாட்சி தேர்தலில் மதுரை மக்கள் திமுகவிற்கு சரியான பாடம் புகட்டுவார்கள் என்றார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu