இந்திக்கும் இந்தி தெரியாத தேர்வர்களுக்கும் பாரபட்சம் ஏன்: மதுரை எம்.பி கேள்வி
மதுரை எம்பி சு.வெங்கடேசன்
இந்திக்கும் இந்தி மொழி பேசாத தேர்வர்களுக்கும் அப்பட்டமான பாரபட்சம் ஏன். இந்த அநீதியான விதிமுறைகளை அகற்ற வேண்டுமென வலியுறுத்தி மதுரை எம்பி சு. வெங்கடேசன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார் .
CMA (inter) தேர்வுகளில் இந்த பாரபட்சம் இருப்பதாகவும், இது தொடர்பாக (இன்ஸ்டியூட் ஆஃப் காஸ்ட் ஆக்கவுண்டன்ட்ஸ் ஆஃ இந்தியா) தலைவர் பி .ராஜூ ஐயர் மற்றும் துணை தலைவர் விஜேந்தர் சர்மா ஆகியோருக்கு எழுதியுள்ள கடித விவரம்: மேற்கொண்ட தேர்வை எழுதுகிறவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் என்னை அணுகி தேர்வு முறைமையில் உள்ள பாரபட்சத்தை கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
நானும் அந்த தேர்வுக்கு வெளியிட்டுள்ள அறிவிக்கையைப் பார்த்தேன். அப்பட்டமான பாரபட்சம் அதில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அந்த அறிக்கையின் 13-வது அம்சம் இந்தி தேர்வாளர்களுக்கு மட்டும் எழுத்துப்பூர்வமான விடைத்தாள் physical answer sheet இறுதி மதிப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படும். இதற்கு இந்தி மொழி வழி தேர்வர்கள் மட்டுமே தகுதி உடையவர்கள் என்று அழுத்தமாக கூறப்பட்டுள்ளது.
இந்தி அல்லாத வழி தேர்வர்கள் அதாவது ஆங்கிலத்தில் தேர்வு எழுதுபவர்கள், கணினி தட்டச்சு வாயிலாக விளக்கம் முறை சார் கேள்விகளுக்கு விடை தரவேண்டும். இதில் முன்னர் 40% 100 மதிப்பெண்கள் மட்டுமே தரப்பட்டு வந்த நிலை மாற்றப்பட்டு தற்போது 60% 100 என விளக்க முறை கேள்விக்கான மதிப்பெண்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
தட்டச்சு வாயிலாக விடை அளிக்க வேண்டும் என்கிற பாரபட்சம் ஆங்கிலவழி தேர்வர்களுக்கு சிரமத்தை தருவதோடு மதிப்பெண்களையும் குறைத்து விடும் என்ற அச்சம் உள்ளது.,இந்தி மொழியில் தேர்வு எழுதுபவர்கள் மட்டும் இந்த சிறப்பு வழிமுறை ஏன்? எதனால் வழங்கப்படுகிறது? சென்ற ஆண்டு இல்லாத இந்த விதிமுறை இந்த ஆண்டு சேர்க்கப்பட்டு மதிப்பெண்களும் உயர்த்தப்பட்டது ஏன்?
ஏன் இந்தி அல்லாத மொழியில் எழுதுகிறவர் எழுத்துப்பூர்வ விடைத்தாள் எடுத்துக் கொள்ளப்படாது ? எப்படி ஒரே தேர்வுக்கு இரண்டு வழிமுறைகள் இரண்டு விதமான விதிகள் இருக்க முடியும். இது எப்படி தேர்வு எழுதுபவர்களுக்கு சமமான நியதியாக இருக்கும்? இந்தி அல்லாதவர்களுக்கு சமதள வாய்ப்பு எப்படி கிடைக்கும்.விரைவு தட்டச்சை விட இந்தி தேர்வர்கள் வேகமாக கையில் எழுதி கொடுத்து விடுவார்கள். ஆனால் இந்தி அல்லாத மாணவர்கள் வேறு வழியில்லாமல் அதை அதிக நேரம் எடுத்து தட்டச்சு செய்துதான் கொடுக்க வேண்டும் என்பது அப்பட்டமான அநீதி .
குறிப்பாக பிரிவு சி&டி பிரிவுக்கானவற்றில் கூடுதல் காலத்தை விழுங்குவது தவிர்க்கமுடியாது. ஆயிரக்கணக்கான தேர்வர்கள் இத்தேர்வை எழுத வேண்டியுள்ளது. அதற்குள் பாரபட்சம் நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். உங்களின் சாதகமான பதிலை எதிர்பார்க்கிறேன் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu