நிதி ஒதுக்குவது தொடர்பாக சட்டமன்றத்தில் கேள்வி எழுப்புவோம்: செல்லூர் ராஜு
நிதி ஒதுக்குவது தொடர்பாக சட்டமன்றத்தில் கேள்வி எழுப்புவோம் என்றார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ..
வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாளை கொண்டாடி பின்னர் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மாலை மரியாதை செலுத்தினார்.இதில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில். வீரபாண்டிய கட்டபொம்மன் அன்னியர்களை விரட்டி அடித்தது போல அதிமுக தமிழகத்திற்கு எதிரானவர்களை மற்றும் விரோதம் செய்பவர்களை விரட்டி அடிக்கும். மதுரை மாநகராட்சி பகுதியில் எந்தவிதமான வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை.கடந்த 8 மாதமாக தமிழக அரசு நிதி ஒதுக்கவில்லை பாரபட்சமான முறையில் மதுரையை திமுகவினர் பார்க்கிறார்கள். மதுரையில் தெருவெங்கும் சாக்கடை ஓடுகிறது .சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது . மதுரை ஒரு மாநகராட்சி போல தெரியவில்லை.
முதல்வர் எடப்பாடி கொண்டு வந்த திட்டங்கள் எல்லாம் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. அந்த பணிகளை முடுக்கி விட வேண்டும் என்ற நோக்கில் திமுக செயல்படுகிறது.மதுரையில் உள்ள அமைச்சர்கள் மதுரை என் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் .மதுரைக்கு நிதி ஆதாரத்தை பெற்றுக்கொடுத்து மதுரை வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.மதுரை மாநகராட்சியின் மெத்தனப்போக்கு பணிகள் தாமதத்தை கண்டித்து ஜனவரி 4 அதிமுக சார்பில் போராட்டம் நடைபெறும் என அறிவித்தார்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி யில் 10 கோடி ரூபாய்க்கு சாலை அமைக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.அவருடைய தொகுதிக்கு மட்டும் எப்படி நிதி ஒதுக்கப்பட்டது ?மா நகராட்சி ஒதுக்கியதா?மாவட்ட நிர்வாகம் ஒதுக்கியதா? என்பது பற்றி தெரியவில்லை? எங்கள் சட்டமன்ற தொகுதிகள் புறக்கணிக்கப்படுகிறது குறுகியகால சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றாலும் இதுகுறித்து கேள்வி எழுப்புவோம். அற்புதமானபிரதமர் நமக்கு கிடைத்து உள்ளார் .
அவரை வரவேற்க வேண்டியது நம்முடைய எண்ணம் எங்கள் தலைமையின் எண்ணம் எல்லோரையும் ஒருங்கிணைப்போம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியது குறித்த கேள்விக்கு? அண்ணாமலை அண்ணாமலை தான். அதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.அரசியல் கருத்துகளை எங்கள் தலைவர்கள் பேசுவார்கள்.திமுக அரசியல் மக்களுக்காக நல்லது நடந்தால் அவர நாங்கள் வரவேற்போம்.மக்களுக்கு எதிராக எதுவும் நடந்தால் முதல் குரல் ஆணித்தரமாக அதிமுக் நிர்வாகிகள், தொண்டர்கள், நாங்கள்தான் முதலில் குரல் கொடுப்போம் என பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu