பெண்களுக்கான சீர்வரிசை செய்வதை குறைக்க வேண்டும்: அமைச்சர் கீதாஜீவன்

பெண்களுக்கான சீர்வரிசை செய்வதை குறைக்க வேண்டும்:  அமைச்சர் கீதாஜீவன்
X

அமைச்சர் கீதாஜீவன்(பைல் படம்)

மதுரை அலுவலக திறப்பு விழாவிற்கு வந்த அமைச்சர் கீதா ஜீவன் திருமணத்தின்போது பெண்களுக்கு சீர் செய்வதை குறைக்க வேண்டும் என்றார்

திருமணத்தின்போது பெண்களுக்கு சீர் செய்வதை குறைக்க வேண்டும் என மதுரை அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கன்னியாகுமரியிலிருந்து மதுரை வரை உள்ள 19 தென் மாவட்டங்களில் உள்ள குழந்தைகள் இல்லங்கள் அனைத்தையும் இந்த அலுவலகம் தன்னுடைய நேரடி பார்வை மூலம் கண்காணிக்கப்படும்.குழந்தைகள் சம்பந்தமாக எந்த ஒரு நடவடிக்கையாக இருந்தாலும் இந்த அலுவலகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

திருமணத்தின்போது பெண்களுக்கு சீர் செய்வதை குறைக்க வேண்டும். பெண் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும்.ஆண் பெண் குழந்தைகள் இரண்டு பேரும் தான் பெற்றோரை ஆயுள் முழுவதும் பார்க்கும் சூழல் உள்ளது. அதனால் இந்த விழிப்புணர்வை மக்களிடம் எடுத்துச் சொல்ல உள்ளோம் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!