குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும்
மதுரை சைல்டு லைன் 10 98 அமைப்பு மற்றும் மதுரை சமூக அறிவியல் கல்லூரி சார்பாக குழந்தைகளுக்கான பாலியல் பாதுகாப்பு சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்றது.
மதுரை மாவட்டத்தில் இன்று குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டுமென அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் இரத்தினவேலு தெரிவித்தார் .
மதுரை சைல்டு லைன் 10 98 அமைப்பு மற்றும் மதுரை சமூக அறிவியல் கல்லூரி சார்பாக, குழந்தைகளுக்கான பாலியல் பாதுகாப்பு சட்டம் தொடர்பாக மருத்துவ மாணவர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி பட்டறை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்றது.
இதில், அரசு இராஜாஜி மருத்துவமனை முதலவர் இரத்தினவேலு பேசியதாவது: தற்போது நாட்டில் அதிகரித்து வரும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும். இதற்காக அரசு பல்வேறு அமைப்புகளை ஏற்படுத்தி தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், அனைவரும் குழந்தைகளுக்கான உரிமைகள் மற்றும் பாதுகாப்பு சட்டங்களை அறிந்து கொள்ள வேண்டும் . மதுரை மாவட்டத்தை குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் இல்லாத மாவட்டமாக மதுரையை மாற்ற வேண்டும் என்றார். இதில் மதுரை மாவட்ட சைல்டு லைன் இயக்குனர் சார்லஸ் குழந்தைகள் தொடர்பான விவகாரங்களில் சைல்டு லைன் பற்றிய திட்ட அமைப்பின் செயல்பாடுகளை விவரித்தார்.
இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் தனலட்சுமி சட்டத்தைப் பற்றியும் மருத்துவகளுடைய பங்களிப்பு பற்றியும் கருத்துகளை விவரித்தார் .மருத்துவ கண்காணிப்பாளர் விஜயராகவன் குழந்தைகள் நல மருத்துவத் துறை தலைவர் பால சங்கர் ,மகப்பேறு மருத்துவ துறை தலைவர் சுமதி .மதுரை சமூக அறிவியல் கல்லூரி முதல்வர் நிஷாந்த் சக்தி விடியல் இயக்குனர் விஜய் ஜேசுதாஸ் சைல்டு லைன் 10 98 அமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu