மதுரையில் தேர்தல் விதி மீறல் புகார் செய்யலாம்: தேர்தல் அதிகாரி அறிவிப்பு
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகாரளிக்க திறக்கப்பட்ட 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக புகாரளிக்க மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
மதுரை பகுதியில் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது .இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது .மதுரையில் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் துவங்கியுள்ளது. 1800 425 7861 என்ற எண்ணிற்கு தேர்தல் தொடர்பான விதி மீறல்கள் புகார்களை அளிக்கலாம் என்று தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu