சுங்கடி சேலைக்கு 12 % ஜிஎஸ்டியை கைவிட மதுரை எம்.பி . வெங்கடேசன் வலியுறுத்தல்

சுங்கடி சேலைக்கு 12 %  ஜிஎஸ்டியை கைவிட  மதுரை எம்.பி . வெங்கடேசன் வலியுறுத்தல்
X

மதுரை சுங்கடி சேலைகளுக்கு ஜனவரி முதல் 12 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிப்பை கைவிட ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், சு. வெங்கடேசன் எம்.பி நேரில் வலியுறுத்தினார்.

சுங்கடி சேலைகளுக்கு ஜனவரியிலிருந்து 12% ஜிஎஸ்டி வரி விதிப்பை கைவிட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வலியுறுத்தல்

மதுரை சுங்கடி சேலைகளுக்கு ஜனவரி முதல் 12 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிப்பை கைவிட ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், சு. வெங்கடேசன் எம்.பி நேரில் வலியுறுத்தினார்.

சுங்கடி சாரீஸ் மதுரையின் அடையாளங்களில் ஒன்று.மொழி சிறுபான்மையினராக உள்ள சௌராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இத்தொழிலை பாரம்பரியமாக செய்து வருகின்றனர் .இத்தொழிலில் கைகட்டு வடிவமைப்பு, மெழுகு பிரின்ட் வடிவமைப்பு, ஸ்கிரீன் பிரின்ட் வடிவமைப்பு, சாயமிடுதல் மற்றும் சலவை செய்தல் போன்ற பணிகள் இத்தொழிலில் உள்ளடக்கம்.10 ஆயிரம் குடும்பங்கள் இத்தொழிலை நம்பி ஈடுபட்டுவருகின்றனர்.

விவசாய கூலி பெண்கள் மீனவப் பெண்கள் உள்ளிட்ட அடித்தட்டு மக்கள் அணியும் உடையான சுங்கடி சேலை தயாரிக்கும் தொழில் 1995ல் குடிசைத் தொழிலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.சிறப்பான நேர்த்தியான சேலைக்கு புவிசார் குறியீடு 2005-இல் வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய பெருமை வாய்ந்த சுங்கடி சாரிஸ் தயாரிக்கும் தொழில் ஒன்றிய அரசின் வரி விதிப்பு கொள்கையால் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது.இதனால் முற்றிலும் வரிவிலக்கு அளிக்க வேண்டிய இத்தொழிலுக்கு 2017 ஆம் ஆண்டு 5% வரி விதித்தது மத்திய அரசு.தற்போது 12% ஆக உயர்த்தியது ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலாகும் என்று ஆணை பிறப்பித்துள்ளது. மத்திய அரசு ஏழை எளிய மக்களை பாதிக்கும் இந்த வரி உயர்வை உடனடியாக கைவிட வேண்டும்.என மத்திய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மதுரை எம்.பி சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

Tags

Next Story