தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்ற இருவர் கைது

தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்ற இருவர் கைது
X

கோப்பு படம்

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே , அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்டம்ப ஒத்தக்கடை பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் அடிப்படையில், ஒத்தக்கடை அருகே நரசிங்கம் மற்றும் பாரதி நகர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதி பெட்டிக் கடைகளில், தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர். அவரிடம் இருந்து புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒத்தக்கடை போலீசார் புகையிலை விற்ற இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!