மதுரை அருகே அரசு அலுவலகத்தில் கணினி உள்ளிட்ட பொருட்கள் திருட்டு

மதுரை அருகே அரசு அலுவலகத்தில் கணினி உள்ளிட்ட பொருட்கள் திருட்டு
X
மதுரை ரயில்வே காலனியில் அரசு சுகாதார அலுவலகத்தின் பூட்டை உடைத்து கணினி உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டது.

மதுரை ரயில்வே காலனியில் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் ஆள் இல்லாத நேரம் பார்த்து பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கு வைத்து இருந்த கம்ப்யூட்டர், மானிட்டர் ,பென்டிரைவ், ஆகிய பொருட்களை திருடி சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஆனந்த் என்பவர் கரிமேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கைரேகை நிபுணர்களை வரவழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிக ஆள் நடமாட்டம் உள்ள இப்பகுதியில் கொள்ளை சம்பவம் நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அரசு அலுவலகத்தில் கைவரிசை காட்டிய மர்ம கொள்ளையர்களை போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story