மதுரை: செல்போன் டவர் அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

மதுரை: செல்போன் டவர் அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு
X

அலங்காநல்லூர் அருகே கவுண்டம்பட்டியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் செல்போன் டவர் கேட்டு மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மதுரை அலங்காநல்லூர் பகுதியை சேர்ந்த கவுண்டம்பட்டி பகுதி மக்கள் செல்போன் டவர் கேட்டு மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு அலங்காநல்லூர் அருகே கவுண்டம்பட்டியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் செல்போன் டவர் கேட்டு மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

எங்கள் பகுதியில் செல்போன் டவர் இருந்தது. ஆனால் தற்போது ஒப்பந்த காலம் முடிந்து விட்டதால் டவறை அகற்றி விட்டார்கள். இதனால் எங்கள் பகுதியில் உள்ள பொதுமக்கள் அவசர தகவல் தெரிவிக்கவும், மாணவர்கள் ஆன்லைனில் வகுப்பு பாடங்களை படிக்க முடியாமல் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர் .

இந்நிலையில் எங்கள் பகுதியில் மீண்டும் செல்போன் டவர் அமைத்துக் கொடுக்கும் படி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் சுமார் 50க்கும் மேற்பட்டோர் நேரில் மனு அளித்தனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!