மதுபோதையில் அதிவேகமாக வந்த கார் தடுப்பு சுவர் மீது மோதி தீப்பிடித்து சேதம்

மதுபோதையில் அதிவேகமாக வந்த கார்  தடுப்பு சுவர் மீது மோதி தீப்பிடித்து சேதம்
X

மதுரையில் நேரிட்ட விபத்தில் தீப்பிடித்து எரிந்த கார்

மதுரை சிம்மக்கல் பகுதியில் மது போதையில் அதிவேகமாக வந்த கார் தடுப்பு சுவற்றில் மோதியவிபத்தில் தீப்பிடித்து சேதமானது

மதுரை சிம்மக்கல் பகுதியில் மதுபோதையில் அதி வேகமாக வந்த கார் நள்ளிரவு தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் கார் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.

மதுரை புதூர் பகுதியைச் சேர்ந்த சுகன் என்ற இளைஞர் சிம்மக்கல் சாலை வழியாக ரயில்வே நிலையம் பகுதிக்கு காரில் அதிவேகமாக சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து சிம்மக்கல் சிக்னல் அருகே உள்ள கம்பத்தில் மோதி அருகில் இருந்த மொபைல் கடை ஒன்றின் மீது மோதி நின்றது. இவ்விபத்தில் கார் முழுவதும் தீப்பற்றி எரிய தொடங்கியது.

இதனை கண்ட அருகில் இருந்த பொதுமக்கள் காரில் இருந்தவர்களை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இவ்விபத்தில் கார் முழுவதுமாக தீப்பிடித்த நிலையில் கருகி எரிந்தது. சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இச்சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் காரை மதுபோதையில் ஓட்டி வந்ததால்இந்த விபத்து நேரிட்டதுதெரியவந்தது.இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சிம்மக்கல் பகுதி இரவு நேரங்களிலும் பகல் நேரங்களிலும் தூங்காநகரம் என்ற பெயர் பெற்ற முக்கிய் பகுதியாகும்.இவ்விபத்தில் அதிர்ஷ்டவசமாக எவ்வித உயிர் சேதம் அதிர்ஷ்ட் வசமக் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ஈரோட்டில் வருமான வரித் துறை சோதனை நிறைவு..!