தி.மு.க.விடம் மதுரை மாநகராட்சியை பறிகொடுத்தது அ.தி.மு.க.

தி.மு.க.விடம் மதுரை மாநகராட்சியை பறிகொடுத்தது அ.தி.மு.க.
X
67 வார்டுகளில் வெற்றி பெற்று மதுரை மாநகராட்சியை அ.தி.மு.க.விடம் இருந்து தி.மு.க. கைப்பற்றியது.

மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் பதிவான வாக்குகள் 4 வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணப்பட்டன.

அவற்றில் 80ல் தி.மு.க. கூட்டணியும், 15ல் அ.தி.மு.க.வும், 4ல் சுயேட்சை-, 1ல் பா.ஜ.க.வும் என 100 வார்டுகளில் வெற்றி பெற்ற விபரம் வெளியிடப்பட்டது.

மதுரை மாநகராட்சியில் தி.மு.க. 77 வார்டுகளில் போட்டியிட்டது.

அதில் 67 வார்டுகளில் வெற்றி கண்டது.

10 வார்டுகளில் தி.மு.க தோல்வி கண்டது.

தி.மு.க. கூட்டணியில் 8 வார்டுகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 4 வார்டுகளில் வெற்றி. 4வார்டுகளில் தோல்வியடைந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 8 வார்டுகளில் போட்டியிட்டு 4 வார்டுகளில் வெற்றியடைந்தது. 4 வார்டுகளில் தோல்வியடைந்தது.

விடுதலை சிறுத்தை கட்சி இரண்டு வார்டுகளில் ஒரு வார்டுகளில் மட்டுமே வெற்றியை பதிவு செய்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வழங்கப்பட்ட ஒரு இடத்தில் தோல்வியை தழுவியது.

மொத்தமாக மதுரையில் தி.மு.க. கூட்டணி 99 இடங்களில் போட்டியிட்டு 80 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது .

19 இடங்களில் தோல்வியடைந்தது.

அ.தி.மு.க. 15 இடங்களில் வெற்றியும் 85 இடங்களில் தோல்வியடைந்தது.

பா.ஜ.க. ஒரு இடத்தில் வெற்றி பெற்றது 99 வார்டுகளில் தோல்வியடைந்தது.

சுயேச்சை ஒரு வார்டில் மட்டுமே வெற்றி.அடைந்துள்ளது.

மக்கள் நீதி மையம், தே.மு.தி.க ,அ.ம.மு.க,நாம்தமிழர்,பா.ம.க. ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் பல வருடங்களாக அ.தி.மு.க. விடம் இருந்த மதுரை மாநகராட்சியை தி.மு.க. இந்த தேர்தலின் மூலம் கைப்பற்றியுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!