சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜினில் கம்பி சிக்கியதாக மதுரை கோட்ட ரயில்வே விளக்கம்
அருப்புக்கோட்டை அருகே சிலம்பு விரைவு ரயிலில் சிக்கிக்கொண்ட மின்சார வயரை அகற்றும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்
மின்சார கம்பி திருட்டு சம்பவத்தால் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜினில் கம்பி சிக்கியதாக மதுரை தெற்கு ரயில்வே கோட்டம் விளக்கமளித்துள்ளது.
மானாமதுரை முதல் விருதுநகர் ரயில்வே பிரிவில் மின்சாரம் மயாமாக்களுக்காக மின் வயர்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது . இந்த மின்சார வயர்கள் எளிதாக மின்சாரம் கடத்தும் தயாரிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு அருப்புக்கோட்டை அருகே சமூக விரோதிகள் 70 மீட்டர் நீளமுள்ள செம்பு கம்பி வயரை திருடி சென்று ள்ளனர். அவர்கள் கத்தரித்து போக மீதி வயர்கள் ரயில் பாதையில் சேதமடைந்து தொங்கியுள்ளன . அதிகாலை 5 மணி அளவில் பனிமூட்டம் சூழலில், அந்தப் பகுதியில் வந்த சென்னை முதல் செங்கோட்டை வாரம் மூன்று முறை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜின் பகுதியில் தொங்கிக்கொண்டிருந்த வயர்கள் சிக்கி சுற்றிக் கொண்டன.
வயர்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அந்த ரயிலில் சிக்கிய் வயரை எடுக்கும் பணியை முடித்து இடையூறின்றி ரயிலை அனுப்பி வைத்தனர். இதனால் இந்த ரயில் இரண்டு மணி நேரம் சம்பவ இடத்தில் நிற்க வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டது. திருட்டு சம்பவம் குறித்து காவல் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டுள்ளது. இன்னும் மின்சாரம் மயமாக்கும் பணிகள் முடிவடையாததால் அந்த வயரில் 70 கிலோ வாட் மின்சாரம் செல்லவில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu