அகல ரயில் பாதையில் சோதனை ஓட்டம்: ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

அகல ரயில் பாதையில் சோதனை ஓட்டம்: ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு
X

பைல் படம்

மானாமதுரை ராமநாதபுரம் மின்சார ரயில் பாதை மற்றும் ஆண்டிபட்டி தேனி புதிய அகல ரயில் பாதையில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது

மானாமதுரை ராமநாதபுரம் மின்சார ரயில் பாதை மற்றும் புதிய ரயில் பாதை ஆண்டிபட்டி தேனி அகல ரயில் பாதையில் சோதனை ஓட்டம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு.மேற்கொள்ள உள்ளார்.

மதுரை முதல் ராமநாதபுரம 107 கிலோ மீட்டர் நீளமுள்ள அகல ரயில் பாதையில் மின்சார மயமாக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் 47 கிலோ மீட்டர் தூரம் உள்ள மதுரை முதல் மானாமதுரை அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்று கடந்த டிசம்பர் 5ஆம் தேதி அன்று ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்திருந்தார் .

தற்போது அந்தப் பகுதியில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் மானாமதுரை ராமநாதபுரம் எடை 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு மின்சார மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்று உள்ளன . இந்நிலையில் மானாமதுரை முதல் ராமநாதபுரம் மின்சார ரயில் பாதையை பெங்களூர் தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் ஜனவரி 30ஆம் தேதி என்று ஆய்வு செய்கிறார்.

ஆய்விற்கு பின்பு அன்றைய தினம் ராமநாதபுரத்தில் இருந்து மானாமதுரை வரை மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை ரயில் வேக சோதனை ஓட்டம் நடத்த இருக்கிறார் .இந்த சோதனை ஓட்டம் நடைபெறும் காலகட்டத்தில் பொதுமக்கள் மற்றும் ரயில் பாதை அருகில் குடியிருப்போர் ரயில் பாதையை கடக்கும் நெருங்கும்போது வேண்டாம் என மதுரை கோட்ட ரயில்வே எச்சரிக்கை. விடுத்துள்ளது .

மேலும் மதுரை முதல் போடிநாயக்கனூர் அகல ரயில் பாதை திட்டத்தை ஏற்கனவே 58 கிலோ மீட்டர் தூரம் உள்ள மதுரை முதல் ஆண்டிபட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு பணிகளை முடித்துள்ளார் .

தற்போது ஆண்டிபட்டி தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே 17 கிலோ மீட்டர் தூரத்திற்கு அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு அதில் ரயில் இன்ஜின் வேக சோதனை ஓட்டம் நடத்திய ஆய்வு செய்யப்பட்டுள்ளது.தற்போது இந்த புதிய ஆண்டிபட்டி தேனி அகல ரயில் பாதையில் ஜனவரி 31ஆம் தேதி என்று பெங்களூர் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்ய இருக்கிறார்.

ஆய்விற்கு பின்பு அன்றைய தினம் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை தேனி ஆண்டிபட்டி இடையே ரயில் வேக சோதனை ஓட்டம் மூலம் ஆய்வு நடத்த இருக்கிறார். எனவே இந்த சோதனை ஓட்டம் நடைபெறும் காலகட்டத்தில் பொதுமக்கள் மற்றும் ரயில் பாதை அருகில் குடியிருப்போர் ரயில் பாதையை கடக்கும் நெருங்க வேண்டாம் என மதுரை கோட்ட தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!