மெட்ரோ ரயில் திட்டத்திற்கான ஆய்வு பணிகள் விரைவில் தொடங்கும்
மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கான பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டர் அறிவிப்பை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
திட்டப் பகுதியில் பயணிகள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல், எதிர்கால தேவை மற்றும் மாற்றுத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து நான்கு மாதத்தில் திட்ட அறிக்கை வழங்க வேண்டுமென டெண்டர் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுத் திட்டங்களையும் கருத்தில் கொள்ளப்படும். பொதுப் போக்குவரத்து தடங்கள், மேம்பாட்டுக்கான திட்டங்கள் குறித்தும் ஆய்வு பணிகள் நடந்துள்ளன.
மதுரை உள்ளூர் திட்டக் குழு பகுதி பல்கலைக்கழக புதிய நகர் மேம்பாட்டு ஆணைய பகுதி, திருப்புவனம் உள்ளூர் திட்ட பகுதி மற்றும் மேலூர் உள்ளூர் திட்ட பகுதி ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் ஆய்வு பணிகள் நடைபெறவுள்ளன. பல்வேறு நிலைகளில் ஆய்வு மதுரை விரைவு போக்குவரத்து பெருந்திட்டம் என்பதன் அடிப்படையில், நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ, மெட்ரோ நியோ, மற்றும் மெட்ரோ லைட் ஆகிய வகைகளில் பயணிகள் பொதுப் போக்குவரத்து திட்டத்தை நிறைவேற்றுவதன் சாத்தியம் குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட உள்ளன.
திட்டப்பாதை. திருப்பங்கள், பயணிகள் எண்ணிக்கை பயணத் திட்டம், நேரம், பயணக்கட்டணம், ரயில் நிலையங்கள் ,தேவையான நிலப் பரப்பு, அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ற வகையிலான திட்டம் ,திட்ட மதிப்பீடு, எந்த வகையிலான நிதி திட்டத்தின் கீழ் திட்டத்தை நிறைவேற்றுவது ,உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் அருகில் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது .
டிசம்பர் இரண்டாம் வாரத்தில் டெண்டர் ஒதுக்கீடு தொடர்பான பணிகள் முடிவடைய உள்ளன.இதன்பிறகு சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்படும். அனேகமாக ஜனவரி மாதம் முதல் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கும் என தெரிகிறது .
தொடர்ந்து பல்வேறு கோணங்களில் ஆய்வு பணிகளை முடித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது இந்த அறிக்கையின் அடிப்படையில் திட்டத்தை எப்படி நிறைவேற்றுவது என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.இதனால் இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்குள் மதுரை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu