கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு திருட்டு: போலீசார் விசாரணை

கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு திருட்டு: போலீசார் விசாரணை
X

மதுரை மேல அனுப்பானடி அருகே கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு திருட்டு 

மதுரை மேல அனுப்பானடி அருகே கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு திருட்டு: போலீசார் விசாரணை

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியான மதுரை மேல அனுப்பானடி கண்மாய் கரை பகுதியில் அமைந்துள்ள பழமையான ஊரணிக்கரை முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

கோவில் முகப்பில் உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடதக்கது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் உள்ள கோவில் சாலை வழியாக செல்லும் பக்தர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் வழிபாடு நடத்தி உண்டியல் காணிக்கை செலுத்தி செல்வது வழக்கம்.

இன்று காலை கோவில் பூசாரி ஸ்ரீனிவாசன் கோவிலுக்கு வந்து பார்த்தபோது கோவில் முகப்பில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருட்டு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். நேற்று முன்தினம் வழக்கம்போல கோவிலில் பூஜைகளை முடித்துவிட்டு இரவு கோவிலை பூட்டிவிட்டு சென்ற நிலையில் கோவிலின் பின்பக்கம் சுவர் வழியாக உள்ளே புகுந்த மர்ம நபர் இரும்பு கம்பியை பயன்படுத்தி உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

கோவில் உண்டியலில் இருந்த 30 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து பூசாரி சீனிவாசன் காவல்துறையில் புகார் செய்தார் மேலும் உண்டியலில் இருந்த சில்லறைகள் மற்றும் 10 ரூபாய் நோட்டுகளை மட்டும் நபர்கள் விட்டு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!