டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியர் காலியிடங்கள் நிரப்பப்படும்

டெல்லி பல்கலைக்கழகம், எம்பி வெங்கடேசன்
டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர் காலியிடங்கள் நிரப்பப்படும் என்று எம்.பி. வெங்கடேசன் கடிதத்திற்கு அமைச்சர் பதில் எழுதியுள்ளார்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் காலியிடங்கள் நிரப்ப படாமல் இருப்பது குறித்து 21 -12 -2021 ஒன்றிய கல்வி அமைச்சருக்கு மதுரை எம்.பி. வெங்கடேசன் அவர்கள் கடிதம் எழுதியிருந்தார் .
அதற்கு மத்திய கல்வி இணை அமைச்சர் முனைவர் சுபாஷ் சர்க்கார் 11- 3 -2022 தேதியிட்ட கடிதம் (D.O NO 62-6/2019-CU II) வாயிலாக பதிலளித்துள்ளார்.
டெல்லி பல்கலைக்கழகம் நாடாளுமன்ற தனி சட்டம் மூலம் உருவாக்கப்பட்டது. டெல்லி பல்கலைக்கழக சட்டம் 1922 மற்றும் அதன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள சட்ட/ அவசர சட்ட நியதிளுக்கு உட்பட்டு செயல்படும் அமைப்பு. அதன் முடிவுகள் அதன் செயற்குழு/ கல்விக்குழு/ மன்றம் ஆகியவற்றால் மேற்கொள்ளப்படுகிறது .என்று தெரிவித்துள்ளார் .
எம்.பி.யின் கடிதம் டெல்லி பல்கலைக்கழகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளதாகவும், அதன் இந்திய நவீன மொழிகள் மற்றும் இலக்கிய கல்வித்துறையில்(Department of MIL& LS) தமிழ் சார் காலியிடங்கள் கீழ்க்கண்ட எண்ணிக்கையில் உள்ளன என தெரிவித்துள்ளார்.
உதவி பேராசிரியர் தமிழ்-1 (பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவினர் EVS),
இணைப்பேராசிரியர்- தமிழ்-1 (பட்டியல் சாதி -sc)1 பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவினர் -EWS),
இதர பிரிவு பிற்பட்ட பிரிவினர் -OBC) ஆகிய காலியிடங்கள் உள்ளன.
மேலும் தயாள் சிங் கல்லூரியில் ஒரு காலியிடம் உள்ளது.
இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான நடைமுறைகளை டெல்லி பல்கலைக்கழகம் தற்போது மேற்கொண்டு வருகிறது .என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சருக்கு கடிதத்திற்கு மதுரை எம்.பி .வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu