/* */

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தங்க பல்லக்கில் சுவாமியும் அம்மனும் பவனி

சித்திரை திருவிழாவின் நான்காம் நாள் நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் பாவக்காய் மண்டபத்தில் எழுந்தருளினார்.

HIGHLIGHTS

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தங்க பல்லக்கில் சுவாமியும் அம்மனும் பவனி
X

தங்க பல்லக்கில் பவனி வந்த சுவாமியும் அம்மனும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவின் நான்காம் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

பாண்டிய மன்னர்களின் படைத் தளபதியாக விளங்கிய தானப்பபிள்ளை மற்றும் அழகப்ப பிள்ளை வகையறா பாவகாய் மண்டபத்திற்கு சித்திரை திருவிழாவின் நான்காம் நாள் நிகழ்ச்சியாக அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் வில்லாபுரம் பாவக்காய் மண்டபத்தில் எழுந்தருளினர்.

மதுரை வில்லாபுரம் பகுதியில் உள்ள பாவக்காய் மண்டபத்தில் சித்திரை திருவிழாவின் நான்காவது நாள் நிகழ்ச்சியாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடை உள்ளிட்ட உற்சவங்கள் எழுந்தருளினர்.

பாண்டிய மன்னர் காலத்தில் படைத்தளபதியாக விளங்கிய தானப்பபிள்ளை, அழக்கப்பாபிள்ளை அவர்களை கவுரவிக்கும் விதமாக சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நான்காம் நாள் விழாவில் மீனாட்சி சொக்கர் பாவக்காய் மண்டபங்களில் எழுந்தருளும் லீலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வில்லாபுரம், அவனியாபுரம், மீனாட்சி நகர், ஜெய்ஹிந்துபுரம், கீரைத்துறை, அனுப்பானடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்.

திருக்கோவில் செல்லும் வழி எங்கும் பக்தர்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்று சுவாமி அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்தனர்.

Updated On: 12 April 2022 4:33 PM GMT

Related News