மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு கோடை விடுமுறை: பதிவுத்துறை அறிவிப்பு

மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு கோடை விடுமுறை: பதிவுத்துறை அறிவிப்பு
X

பைல் படம்

மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு நாளை முதல் ஜூன் 5-ம் தேதி வரை கோடை விடுமுறை: பதிவுத்துறை அறிவிப்பு

உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு நாளை முதல் ஜூன் 5-ம் தேதி வரை கோடை விடுமுறை என பதிவுத்துறை அறிவித்தது.

விடுமுறை நாட்களில் அவசர வழக்குகளை விசாரிக்கும் அமர்வு விவரங்களையும் பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.

விடுமுறை நாட்களில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்குகளை விசாரிக்க , நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஏ.ஆனந்தி, பி.வேல்முருகன், ஜி.சந்திரசேகரன், ஜி.ஆர்.சுவாமிநாதன், செந்தில்குமார் ராமமூர்த்தி, நீதிபதி ஏ.ஏ.நக்கீரன், நீதிபதி வி.சிக்ஞானம், எஸ்.எம்.சுப்ரமணியம், ஜே.சத்தியநாராயண பிரசாத், என்.ஆனந்த் வெங்கடேஷ், ஜி.கே.இளந்திரையன், சி.சரவணன், ஆர்.ஹேமலதா, எம்.எஸ். , முகமது ஷபீக், சி.வி.கார்த்திகேயன் மற்றும் பி புகழேந்தி உள்ளிட்ட 21 நீதிபதிகள் சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் நீதிபதி பாரத சக்கரவர்த்தி உள்ளிட்ட 15 நீதிபதிகள் மதுரை பெஞ்சில் இருந்து வழக்குகளை விசாரிப்பார்கள்.

Tags

Next Story