மதுரை தனியார் நர்சிங் கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை

மதுரை தனியார் நர்சிங் கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை
X
மதுரையில் தனியார் கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரை கீழவாசல் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நர்சிங் கல்லூரியில், உசிலம்பட்டியை சேர்ந்த மேலப்புதூர் பள்ளி தெருவை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகள் ராஜா நர்மதா வயது (23 ) நர்சிங் படித்து வந்தார். இந்நிலையில், நேற்று மதியம் இவர், விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சக மாணவிகள் வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். விளக்குத்தூண் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மாணவியின் உடலை மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் தற்கொலைக்கான காரணம் பற்றி தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், மாணவியின் சக தோழிகள், உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!