மதுரை கோட்டத்தில் ஏப்ரல் 1 முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

மதுரை கோட்டத்தில் பயணிகளின் வசதிக்காக மதுரை- செங்கோட்டை, மானாமதுரை திருச்சி இடையே கூடுதலாக இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் வருகிற 1-ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளன.
செங்கோட்டையிலிருந்து காலை 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் 10:35 மணிக்கு மதுரை வந்து சேரும் மறு மார்க்கத்தில் மதுரையில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் இரவு 9.10 மணிக்கு செங்கோட்டை செல்லும் . இந்த ரயில்கள் தென்காசி ,கடையநல்லூர், பாம்புக்கோவில் சந்தை, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி திருத்தங்கல், விருதுநகர், கள்ளிகுடி , திருமங்கலம், திருப்பரங்குன்றத்தில் நினறு செல்லும் .இரயில்களில் 13 இரண்டாம் வகுப்பு முன்பதிவு இல்லாத பொது பெட்டிகள் மற்றும் 2 சரக்கு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
திருச்சியில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மதியம் 12.50 மணிக்கு மானாமதுரை செல்லும். மறுமார்க்கத்தில் மானாமதுரையில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்படும். சிறப்பு ரயில் மாலை 5.30 மணிக்கு திருச்சி செல்லும்.இந்த இரயில் ஆனது குமாரமங்கலம் ,கீரனூர், வெள்ளனூர், புதுக்கோட்டை, திருமயம், செட்டிநாடு, கோட்டையூர் ,காரைக்குடி, தேவகோட்டை ரோடு, கல்லல், பணங்குடி, சிவகங்கையில் நின்று செல்லும் இரயில்கள் 8 டெமு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என ரயில்வே கோட்டம் தகவல் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu