கோவிலாங்குளம்: மண் பரிசோதனை பயிற்சியில் மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள்

கோவிலாங்குளம்: மண் பரிசோதனை பயிற்சியில் மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள்
X

மண் பரிசோதனையில் ஈடுபட்ட  வேளாண் கல்லூரி மாணவிகள்.

விருதுநகர் மாவட்டம் கோவிலாங்குளம் பகுதியில் மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள் மண் பரிசோதனை பயிற்சியில் கலந்து கொண்டனர்

விருதுநகர் மாவட்டம் கோவிலாங்குளம் பகுதியில் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில். ஹரி புத்திரன் மற்றும் டாக்டர். ராஜா பாபு ஆகியோர், நடமாடும் மண் பரிசோதனை வாகனத்தை பற்றிய தகவல்களை விவசாயிகளுக்காக வழங்கினார்கள். இது ஊரக இளைஞர்களுக்கான மண் பரிசோதனை பற்றிய பயிற்சியாகும். இதில் அனைத்து விதமான மண் மற்றும் நீர் பரிசோதனைகளும் விவசாயிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் மாணவிகள் மண் மாதிரிகளை சேகரித்து நடமாடும் மண் பரிசோதனை வாகனத்தில் ஆய்விற்காக கொடுத்துள்ளனர்.

மதுரை வேளாண்மைக் கல்லூரியில் பயின்று வரும் நான்காம ஆண்டு மாணவிகள் காரியாபட்டி வாசுகி, வினிதா, சுஜிதா, வைஷ்ணவிஸ்ரீ, ஜெய்த்தூன் சமீகா, முபிதா, சோ .வர்ஷினி, விவசாயிகளுடன் சேர்ந்து மண் பரிசோதனையில் ஈடுபட்டனர். இம்முறையிலான ஆய்வு விவசாயிகளுக்கு குறைந்த விலையில் (₹20 )மற்றும் குறுகிய கால இடைவெளியில்( 20) நிமிடங்கள் செய்து தரப்படுகிறது. இப்பரிசோதனை மூலம் மாணவிகள் இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டது.என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!