மதுரை ரயில் தீ விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
மதுரை ரயில் நிலையத்தில் தீ விபத்து
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து கடந்த 17ம் தேதி ஆன்மீக சுற்றுலாவுக்காக பயணிகளை ஏற்றி கொண்டு ரயில் ஒன்று தமிழகம் வந்தடைந்தது. அதில் இருந்த பக்தர்கள் அனைவரும் நாகர்கோவிலில் பத்மநாபசுவாமி கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்தனர். இதனை முடித்து விட்டு அவர்கள் மதுரைக்கு திரும்பியுள்ளனர். நாகர்கோவில் சந்திப்பில் நேற்று (25.8.23) ரயில் எண். 16730 (புனலூர் _ மதுரை எக்ஸ்பிரஸ்) 3.47 மணிக்கு மதுரை வந்தடைந்தது. அந்த பெட்டி மட்டும் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ள மதுரை போடி லைன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தபோது, பயணிகள் சிலர் சமையல் செய்ய முற்பட்டனர்.
இதில், சிலிண்டர் வெடித்து ரயில் பெட்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. அது மளமளவென பற்றி எரிந்து அடுத்தடுத்த பெட்டிகளுக்கும் பரவியது. தனியார் பெட்டியில் இருந்த பயணிகள், சட்ட விரோதமாக கேஸ் சிலிண்டரை கடத்தி வந்ததால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயைக் கண்டு பல பயணிகள் பெட்டியிலிருந்து இறங்கினர். சில பயணிகள் நடைமேடையிலேயே கீழே இறங்கினர் அப்போது, ரயிலில் கடைசியாக இருந்த சிறப்பு முன்பதிவு ரயில் பெட்டியில் 90 பேர் இருந்துள்ளனர். தீ விபத்து பற்றி அறிந்ததும் 60-க்கும் மேற்பட்டோர் கீழே குதித்து தப்பினர்.
உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 5.45 மணிக்கு வந்தனர். 7.15 மணிக்கு தீ அணைக்கப்பட்டது. எனினும், இந்த தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்தனர். இதுபற்றி தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தியில், மதுரையில் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். இதுபற்றி விரிவான விசாரணை நடந்து வருகிறது என அறிவித்து உள்ளது.
தொடர்ந்து தீ விபத்து தொடர்பாக ரயில் பயணிகளுக்கு உதவ, கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதன்படி, 9360552608, 8015681915 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களை தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. ரயில் விபத்து பற்றி அமைச்சர், ரயில்வே உயரதிகாரிகள், காவல் துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
ஐஆர்சிடிசி போர்ட்டலைப் பயன்படுத்தி எந்தவொரு தனிநபரும் தனியார் ரயில்பெட்டியை முன்பதிவு செய்யலாம். கேஸ் சிலிண்டர் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. இந்த பெட்டியை போக்குவரத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
ஆகஸ்ட் 17ஆம் தேதி லக்னோவில் இருந்து பயணத்தைத் தொடங்கினர். அவர்கள் நாளை . 16824 கொல்லம்._ சென்னை எழும்பூர் அனந்தபுரி விரைவு. சென்னை திரும்ப உள்ளனர் அங்கிருந்து லக்னோ திரும்பவார்கள்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu