மதுரையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரௌடி கைது

மதுரையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய  ரௌடி கைது
X

மதுரையில் கைது செய்யப்பட்ட ரௌடி மாரி

மதுரையில் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய பிரபல ரௌடி டோரி மாரி தப்பியோடிய போது கீழே விழுந்து கால் முறிந்தது

மதுரையில் பிரபல ரவுடி மாரிமுத்து என்ற டோரி மாரி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது பல்வேறு கொலை கொள்ளை உட்பட 23 வழக்குகள் உள்ளது.

மதுரை ஜெ.ஜெ.நகர் கண்மாய்க்கரை பகுதியை சேர்ந்த முனியசாமியின் மகன் பிரபல ரவுடி டோரி மாரி என்கிற மாரிமுத்து

( 27 ) இவரை பல்வேறு குற்ற சம்பவங்களில் வழக்குப்பதிவு செய்து போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், தலைமறைவாக போலீசாருக்கு நீண்ட நாட்களாக டிமிக்கி கொடுத்து வந்தார். கீரைத்துறை காவல் நிலையத்தில் உள்ள வழக்கு சம்பந்தமாக தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டாார். போலீசார் கைது செய்ய முற்பட்டபோது டோ ரிமாரி தப்பியோட முயன்ற போது வழுக்கி விழுந்து கால் உடைந்து போனதாக போலீசார் தகவல் தெரிவித்தனர். இவர் தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். மேலும் இவன மீது தொடர் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags

Next Story
ai business transformation